தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெப்பமும் இருக்கும்... மழையும் வரும்.. : வானிலை ஆய்வு மையம் - வானிலைஆய்வு மையம்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலைஆய்வு மையம்

By

Published : May 5, 2019, 4:40 PM IST

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கத்திரி வெயில் துவங்கியுள்ளதால் தமிழகத்தில் வெயில் கொளுத்துகிறது. 'போனி' புயல் தாக்கத்தால், காற்றில் இருந்த ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, உஷ்ணம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல இடங்களில், அனல் காற்று வீசுவதோடு, வெயிலும் உக்கிரமடையும்.

மேலும் காற்றின் சுழற்சி மாறும் நிலையில், இன்னும் சில நாட்களில், ஈரப்பதமான காற்று வீசி, வெப்ப தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. வரும் நாட்களை பொறுத்தவரை தமிழகத்தின் பல இடங்களில் இரு நாட்களுக்கு, அனல் காற்றின் தாக்கம் இருப்பதோடு சில இடங்களில், மாலை நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடி, மின்னலுடன் கூடிய, மழை பெய்யலாம். சென்னையை பொறுத்தவரை 100 டிகிரி வரை வெப்பம் இருக்க வாய்ப்புண்டு. ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ABOUT THE AUTHOR

...view details