மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை செய்வதற்காக தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் ஆய்வகம் ஒன்றுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள கரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 136ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (ஆக. 17) மேலும் 65 ஆயிரத்து 643 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த ஐந்தாயிரத்து 870 நபர்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாநிலம் திரும்பிய இருபது நபர்கள் என மொத்தம் ஐந்தாயிரத்து 890 நபர்களுக்கு நோய்தொற்று இருப்பது புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 36 லட்சத்து 47 ஆயிரத்து 852 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மூன்று லட்சத்து 43 ஆயிரத்து 945 நபர்களுக்கு நோய்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 54 ஆயிரத்து 122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த ஐந்தாயிரத்து 667 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 83 ஆயிரத்து 937ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் சிகிச்சைப் பலனின்றி இன்று மேலும் 120 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 886ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் தற்போது 12 ஆயிரத்து மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டாயிரத்து 478 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் :
சென்னை மாவட்டம்- 1,17,839
செங்கல்பட்டு மாவட்டம்- 21,151
திருவள்ளூர் மாவட்டம்- 20179
காஞ்சிபுரம் மாவட்டம்- 14,035
மதுரை மாவட்டம்- 12,888
விருதுநகர் மாவட்டம்- 11400
தூத்துக்குடி மாவட்டம்- 10040
தேனி மாவட்டம்- 10189
கோயம்புத்தூர் மாவட்டம்- 9362
திருவண்ணாமலை மாவட்டம்- 8797
வேலூர் மாவட்டம்- 8554
ராணிப்பேட்டை மாவட்டம்- 8512
திருநெல்வேலி மாவட்டம்- 7625
கன்னியாகுமரி மாவட்டம்- 7699
கடலூர் மாவட்டம்- 7081
சேலம் மாவட்டம்- 6185