சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கூடுதல் டி.ஜி.பி சந்திப் ராய் ரத்தோர் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து நண்பர்களை அழைத்து விருந்து அளித்துள்ளார். அதில் தொழிலதிபர்கள் பலர், முக்கிய புள்ளிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதில் சென்னை பாந்தியன் குடியிருப்பில் உள்ள ரமேஷ் ஜெய் துலானி (72), மிர்துன் ஜெய்சிங் (76) ஆகிய இருவரும் அந்த விருந்தில் கலந்து கொண்டனர். விருந்தில் மது அருந்திய அவர்கள் எக்ஸ்லேட்டரில் தள்ளாடியபடி கீழே இறங்க முற்பட்டுள்ளனர்.
நட்சத்திர ஹோட்டல் எஸ்கலேட்டரில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு!
சென்னை: பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில், கூடுதல் டி.ஜி.பி கொடுத்த மது விருந்தில் கலந்து கொண்ட நபர் எக்ஸ்லேட்டரில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் இருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர்கள் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்த பின் ரமேஷ் ஜெய் துலானி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தலையில் அடிபட்ட மற்றொரு நபரான மிர்துன் ஜெய்சிங்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ரமேஷ் ஜெய் துலானியின் மகன் ராகுல் ஜெய் துலானி அளித்த புகாரின் அடிப்படையில் கிண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.