தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதையில் காவலரை தாக்கிய 4 மின்வாரிய ஊழியர்கள் கைது! - four eb men arrested in madurai

மதுரை: மதுபோதையில் காவலரை தாக்கிய மின்வாரிய ஊழியர்கள் நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுப்போதையில் காவலரை தாக்கிய 4 மின்வாரிய ஊழியர்கள் கைது!
மதுப்போதையில் காவலரை தாக்கிய 4 மின்வாரிய ஊழியர்கள் கைது!

By

Published : Jul 22, 2020, 8:23 PM IST

மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கனகசுந்தரம், சிறப்பு காவல் படையில் பணியாற்றிவருகிறார். இவரது வீட்டில் மின்சாரம் தடைபட்டதால் மின்வாரிய ஊழியர்களை அழைத்து வந்து பார்க்க கூறியுள்ளார்.

அப்போது அங்கு வந்த நான்கு ஊழியர்கள் மது போதையில் இருந்துள்ளனர். இதனால் நால்வரும் காவலர் கனகசுந்தரத்தை தாக்கியுள்ளனர். இதனையடுத்து இது குறித்து காவலர் கனகசுந்தரம் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதனடிப்படையில் மின்வாரிய ஊழியர்களான வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார், முடக்காத்தான் பகுதியைச் சேர்ந்த காசி, செல்லூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார், காஞ்சரம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க....ஐஐடி நுழைவுத் தேர்வுகளால் அவதிக்குள்ளாகும் மாணவர்கள்: ஈடிவி பாரத் விவாதம்

ABOUT THE AUTHOR

...view details