சென்னையில் கொலை, கொலை முயற்சி, திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்கள், போதைப் பொருட்கள் கடத்துதல், நில அபகரிப்பு உள்ளிட்ட குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவோரை காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் (மே.28) வரை கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 98 பேர், சங்கிலி, செல்போன் பறிப்பு, வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட 29 பேர், சைபர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 10 பேர், கஞ்சா போதைப் பொருட்கள் விற்ற 12 பேர், உணவு பொருள் கடத்தியதாக ஒருவர், ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்ற 2 பேர் என, மொத்தம் 150 குற்றவாளிகளை காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.