சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை குறித்த விவாதம் இன்று நடைபெற்றது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து பேரவையில் பங்கேற்றனர்.
சட்டப்பேரவையில் ’நேரமில்லா நேரத்தில்’ காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, தங்கள் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாகப் பேசினார்.
ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றத்தின் முடிவுகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிப்பது சரியாக இருக்காது என தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு தெரிவித்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, ''ஜனநாயக படுகொலையை மோடியும், பாஜக அரசும் அரங்கேற்றி இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் அசாதாரண சூழ்நிலையினைக் கொண்டு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தோம்.