சென்னையில் நேற்று மட்டும் ஒரே நாளில் மூன்று வெவ்வேறு இடங்களில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் சிந்தாரிப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்த பாத்திமாவிடம் செல்போன், வேளச்சேரி டாம்ஸ் ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த லட்சுமியின் செல்போன் மற்றும் சிந்தாதிரிப் பேட்டை ஜங்ஷன் அருகே நின்றுக் கொண்டிருந்த சந்திரன் ஆகியோரின் செல்போனும் அடையாளம் தெரியாத நபர்களால் பறிக்கப்பட்டது.
தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது! - சிந்தாதரிப்பேட்டை காவல்துறை
சென்னை: செல்போன், செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்களை, சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், இரு சக்கர வாகனத்தில் வரும் வியாசர்பாடியை சேர்ந்த அஜித், ஆவடியை சேர்ந்த சுந்தர்ராஜ் இருவரும் செல்போன், செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது பதிவாகியிருந்தது. இதைத் தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.