தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் தள்ளுவண்டி கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை

சென்னை: மாநகராட்சியில் தள்ளுவண்டி கடைகள் மூலம் காய்கறிகள், பழங்கள் மளிகை சாமான்களை விற்பனை செய்வதை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கிவைத்தார்.

In Chennai essential Products By Trolley Shops
In Chennai essential Products By Trolley Shops

By

Published : Apr 9, 2020, 12:30 PM IST

Updated : Apr 9, 2020, 5:54 PM IST

கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை இணைந்து சென்னையில் தள்ளுவண்டி கடைகள் மூலம் காய்கறிகள், பழங்கள் மளிகை சாமான்களை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சிறு வியாபாரிகள் கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் அணிந்துகொண்டு பொதுமக்களின் வீட்டு வாசலுக்கே சென்று குறைந்த விலைக்கு அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய முடியும்

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், "பொதுமக்களுக்கு எந்தத் தடையும் இல்லாமல் அந்தந்த பகுதியிலேயே அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாநகராட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக 5000 தள்ளுவண்டி கடைகள், 400 சிறிய சரக்கு வாகனத்தின் செயல்பாட்டை தொடங்கி வைக்கிறோம். ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்தக் கடைகள் செயல்படும். புதிதாக அனுமதி கேட்கும் வியாபாரிகளுக்கும் அனுமதி வழங்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க...கேன்சர் மருந்து கிடைக்காமல் தவித்த தமிழ்நாட்டு நோயாளி; கைகொடுத்த கேரளா!

Last Updated : Apr 9, 2020, 5:54 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details