தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 8 இடங்கள் மூடப்பட்டு சீல்!

சென்னை: சென்னையில் எட்டு இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, காவல் துறையினர் தீவிரக் கண்கானிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

சென்னையில் 8 இடங்கள் மூடப்பட்டு சீல்!
சென்னையில் 8 இடங்கள் மூடப்பட்டு சீல்!

By

Published : Apr 3, 2020, 6:13 PM IST

சென்னையில் புளியந்தோப்பு, எண்ணூர், தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், முத்தியால்பேட்டை, புதுப்பேட்டை, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.

அதுமட்டுமின்றி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எல்லைகளை மூடி காவலர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், சென்னை புதுப்பேட்டை பகுதியில் உள்ள 32 தெருக்களில் 2,500 வீடுகளை சீல் வைத்து தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் புதுப்பேட்டை பகுதியில் நான்கு கரோனா தொற்று உள்ளவர்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி அறிவுறுத்தலின் பேரில் இந்தப் பகுதி முழுவதும் தீவிரக் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு, காவல் துறை கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க...கரோனா தொகுப்பு: தள்ளாடும் எஸ்.பி.ஐ.!

ABOUT THE AUTHOR

...view details