தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நன்னடத்தை பிணை மீறிய குற்றவாளி சிறையில் அடைப்பு - நன்னடத்தை பிணை

சென்னை: நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளியை புனித தோமையார் மலை துணை ஆணையர் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

பால்ராஜ்
பால்ராஜ்

By

Published : Sep 15, 2020, 11:00 AM IST

சென்னை வேளச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் பால்ராஜ் (21). இவர் மீது போதைப் பொருள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், பால்ராஜ் கடந்த ஆண்டு புனித தோமையார் மலை துணை ஆணையர் பிரபாகர் முன்பு ஆஜராகி நான் திருந்தி வாழ போவதாகவும் இரண்டு வருட காலத்திற்கு எந்த ஒரு குற்றச் செயலிலும் ஈடுபட மாட்டேன் எனவும் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்தார்.
ஆனால் பால்ராஜ் ஆகஸ்ட் மாதம் ஆதம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்டதன் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆகவே பால்ராஜ் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக செயல் நடுவர் ஆகிய துணை ஆணையர் பிரபாகர் குற்றவாளி பால்ராஜுக்கு 110 இன் கீழ் நன்னடத்தை பத்திரம் எழுதிக் கொடுத்து இரண்டு வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாள்களை கழித்து மீதமுள்ள 465 நாட்கள் பிணையில் வர முடியாதவாறு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details