தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 8, 2021, 7:44 AM IST

ETV Bharat / state

இன்றைய முக்கிய செய்திகள் #EtvBharatNewsToday

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

News Today
News Today

ஹைதராபாத் : திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன் விநியோகம், மாலையும் நடைபெறும் சட்டப்பேரவை, ஒன்றிய அமைச்சரவை கூட்டம், தமிழ்நாடு ஆளுநர் குடியரசுத் தலைவரை சந்திக்க வாய்ப்பு, ஹால் டிக்கெட் வெளியீடு, புறநகர் ரயில் சேவையில் மாற்றம் என இன்றைய முக்கிய நிகழ்வுகள் இதோ.

  1. சட்டப்பேரவையில் இன்று!!தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) காலை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
    தற்காலிக சட்டப்பேரவை
  2. மாலை:மாலை 5 மணிக்கும் கூடும் கூட்டத்தில் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், கே.எஸ். மஸ்தான், என். கயல்விழி செல்வராஜ், ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், டி. மனோ தங்கராஜ் ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
  3. ஒன்றிய அமைச்சரவை கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை (செப்.8) கூடுகிறது. அப்போது கரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி விநியோகம், ஆப்கானிஸ்தான் அசாதாரண சூழல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
    பிரதமர் நரேந்திர மோடி
  4. புறநகர் ரயில் சேவை மாற்றம்: சென்னை எழும்பூர்- விழுப்புரம் மார்கத்தில் தாம்பரம் யார்டில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் புறநகர் ரயில் சேவையில் இன்று (புதன்கிழமை) மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி கும்மிடிப்பூண்டி- செங்கல்பட்டு ரயில் காலை 7.50 மணிக்கு பகுதி ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் சென்னை- கடற்கரை ரயில்களும் காலை9.32,10.10, 10.56, 11.50 மற்றும் மதியம் 12.15 பகுதி ரத்து செய்யப்படுகின்றன.
    ரயில் சேவை
  5. ஹால் டிக்கெட் வெளியீடு: பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உள்பட ) செப்.8ஆம் தேதி காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
    ஹால் டிக்கெட்
  6. திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன்: திருப்பதியில் உள்ள சீனிவாசம் வளாகத்தில் புதன்கிழமை (செப்.8) சர்வ தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன. தினசரி 2 ஆயிரம் வரை டோக்கன்கள் வழங்கப்படும்.
    திருப்பதி
  7. ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு: பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்ற நிலையில் பன்வாரிலால் புரோகித் இன்று (புதன்கிழமை) குடியரசுத் தலைவரை சந்திக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  8. கோவை வேளாண்மை பல்கலைக்கழகம்: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை, முனைவர் பட்டப் படிப்புகளில் சேருவதற்கு புதன்கிழமை (செப்.8) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    விவசாயம்

ABOUT THE AUTHOR

...view details