தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - மதுரை

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

NEWS TODAY
NEWS TODAY

By

Published : Aug 31, 2021, 6:42 AM IST

ஹைதராபாத் : சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள், மதுரை கரோனா தடுப்பூசி மையம் மாற்றம், மாரியப்பன் தங்கவேலு கலந்துகொள்ளும் போட்டி என இன்றைய முக்கிய நிகழ்வுகள் இதோ.!

  1. சட்டப்பேரவையில் இன்று..!:இரண்டு நாள்கள் விடுப்புக்கு பின்னர் சட்டப் பேரவை இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கூடுகிறது. இன்று வருவாய், பேரிடர், இயற்கைச் சீற்றங்கள், தொழில், தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறுகின்றன.
    சட்டப்பேரவை
  2. மதுரை கரோனா தடுப்பூசி மையம் மாற்றம்:மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்பட்டுவந்த கரோனா தடுப்பூசி மையம் செவ்வாய்க்கிழமை (ஆக.31) முதல் அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்படும்.
    தடுப்பூசி
  3. மாணவர்களுக்கு பேருந்து பயணம்:தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்களின்படி நாளை (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், செப்.1ஆம் தேதி முதல் மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
    தமிழ்நாடு பேருந்து
  4. 11ஆம் வகுப்பு- விண்ணப்பிக்க கடைசி நாள்:காரைக்கால் நவோதயா வித்யாலாவில் 11ஆம் வகுப்புக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஆக.31) கடைசி நாளாகும்.
    பள்ளி விண்ணப்பம்
  5. மாரியப்பன் தங்கவேலு போட்டி:தங்க மகன் மாரியப்பன் பங்கேற்கும் டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 3.55க்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டியை டிடி ஸ்போர்ட்ஸ் நேரடியாக ஒளிபரப்புகிறது.
    மாரியப்பன் தங்கவேலு

ABOUT THE AUTHOR

...view details