கரோனா அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய இமான் அண்ணாச்சி - இமான் அண்ணாச்சி
சென்னை: சாலையோரம் தங்கியிருக்கும் ஆதரவற்றோருக்கு நடிகர் இமான் அண்ணாச்சி இலவசமாக உணவு பொட்டலங்களை வழங்கினார்.
imman
அதுமட்டுமல்லாது சாலையோரங்களில் தங்கியிருக்கும் ஆதரவற்றோருக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சாலையோரங்களில் தங்கியிருப்போருக்கு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் உணவு அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை தியாகராய நகரில் சாலையோரம் தங்கியிருக்கும் ஆதரவற்றோருக்கு தொலைகாட்சி தொகுப்பாளரும் நடிகருமான இமான் அண்ணாச்சி இலவசமாக உணவு பொட்டலங்களை வழங்கினார்.