தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிச.16ஆம் தேதி 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

Tamil Nadu weather Report: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாட்டில் வருகின்ற டிசம்பர் 16-ஆம் தேதி தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 16ஆம் தேதி மழை அலெர்ட்
தமிழ்நாட்டில் 16ஆம் தேதி மழை அலெர்ட்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 5:15 PM IST

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 தினங்களுக்கு (13ஆம் தேதி முதல் - 15ஆம் தேதி வரை) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதேப்போல் வருகின்ற 16-ஆம் தேதி அன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24மணி நேர மழை நிலவரம்: இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, "தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்ட சேர்வலாறு அணை, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

ஊத்து (திருநெல்வேலி), பாபநாசம் (திருநெல்வேலி), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்), காக்காச்சி (திருநெல்வேலி) ஆகிய பகுதிகளில் தலா 2செ.மீ. மழையும், குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), மாஞ்சோலை (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), திருச்செந்தூர் (தூத்துக்குடி) ஆகிய பகுதிகளில் தலா 1செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

இயல்பை விட 4% குறைவு பதிவு: வடகிழக்கு பருவமழை பொருத்த வரையில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 12-ஆம் தேதி வரை பதிவான மழை அளவு 386.மி.மீ ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 401.2 மி.மீ ஆகும். இது இயல்பை விட 4 சதவீதம் குறைவு. மேலும், அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, கரூர், தஞ்சை, திருச்சி, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவே மழை பதிவாகி உள்ளது.

சென்னை மழை நிலவரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

இதேப்போல், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். தொடர்ந்து தற்போது அரபிக் கடலில் தென்கிழக்கு பகுதிகளில் புதிதாக ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:எண்ணூர் கச்சா எண்ணெய் கழிவு; தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சிபிசிஎல் நிறுவனத்துக்கு வழங்கிய வழிகாட்டுதல்கள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details