தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஹூக்கா பாருக்கு சீல்! - chennai police

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் காவல் நிலையம் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஹூக்கா பாரை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஹூக்கா பாருக்கு சீல் வைக்கப்பட்டது
சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஹூக்கா பாருக்கு சீல் வைக்கப்பட்டது

By

Published : Nov 9, 2022, 10:38 PM IST

சென்னை: ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தின் எதிர்புறமாக உள்ள ரெட்லான் கேட் இரண்டாவது தெரு பகுதியில் LPK ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சட்டத்திற்குப் புறம்பாக ஹூக்கா பார் செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது.

மேலும் இளைஞர்கள், சிறுவர்கள் என ஹூக்கா பாரில் போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாகவும், அந்த வளாகத்திலேயே, உணவகம், அழகுசாதன நிலையங்கள் உள்ள நிலையில், அடிக்கடி போதையில் ரகளையில் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக வந்த தொடர் புகாரின் காரணமாக ஆயிரம் விளக்கு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் சட்டவிரோதமாக ஹூக்கா பார் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஹூக்கா பாரை நடத்தி வந்த முஸ்தபா இணையத் உள்ளிட்ட மூன்று நபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் பணம், ஹூக்கா குடுவை 10, மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஹூக்கா பாரை பூட்டி சீல் வைத்தனர்.

சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஹூக்கா பாருக்கு சீல்!

இதையும் படிங்க:விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.33 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details