தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு.. - செல்வமணி

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு பாஜகவினர் மற்றும் திரை பிரபலங்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு
சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு

By

Published : Jul 19, 2022, 10:33 AM IST

Updated : Jul 19, 2022, 11:03 AM IST

சென்னை : மாநிலங்களவை நியமன எம்.பியாக இசைஞானி இளையராஜா சமீபத்தில் நியமிக்கப்பட்டார். பல்வேறு இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இளையராஜா அமெரிக்கா சென்றிருந்தார். இந்நிலையில் இசை நிகழ்ச்சியை முடித்து விட்டு இன்று சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் இளையராஜாவை வரவேற்றனர். இயக்குனர் பாரதிராஜா, கங்கை அமரன், ஆர்.கே செல்வமணி, சினிமா இசைக்கலைஞர்கள் சங்கம், மற்றும் ரசிகர்கள் சார்பிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு

புதிதாக அறிவிக்கப்பட்ட நியமன எம்பிக்கள் சிலர் நேற்று பதவி ஏற்ற நிலையில், இளையராஜா நேற்று பதவியேற்கவில்லை. மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் விரைவில் இளையராஜா விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : இரவின் நிழல் வியாபார நோக்கத்தில் எடுக்கப்பட்ட படம் அல்ல - நடிகர் பார்த்திபன்

Last Updated : Jul 19, 2022, 11:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details