தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனைக்கும், மோடிக்கும் சம்பந்தம் இல்லை - இல. கணேசன் - துரைமுருகன்

சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைக்கும், பிரதமர் மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாஜக முன்னாள் மாநில தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

இல. கணேசன்

By

Published : Mar 30, 2019, 4:37 PM IST


சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன் கூறியதாவது, இந்தியா விண்வெளி துறையில் முன்னேறியிருக்கிறது எனபதை பிரதமர் அறிவித்தது தேர்தல் விதிமீறல் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் விதிமீறல் இல்லை என தேர்தல் ஆணையம் தெளிவாக சொல்லியிருகிறது.

மேலும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சிவகங்கையில் பரப்புரை செய்த போது பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை மட்டமாக விமர்சனம் செய்திருக்கிறார். இதை நான் கண்டிக்கிறேன். மேலும் திமுக பொருளார் துரைமுருகன் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதற்கும், மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details