சென்னை:இந்திய மருந்துப் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஆல்பா-அமைலஸ் (alpha-amylase), செல்லுலாஸ் (cellulase) போன்ற தொழில்துறை நொதிகளுக்கு அதிகளவில் கிராக்கி இருந்து வருகிறது. வேளாண்மை கழிவுகளில் இருந்து தொழில்துறை நொதிகள் மற்றும் மதிப்புக் கூட்டுத் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய 'பேசிலஸ் எஸ்பி பிஎம்06' எனப்படும் பாக்டீரியா எவ்வாறு உதவுகிறது என்பதை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சென்னை ஐஐடி உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் சத்தியநாராயணா என்.கும்மடி, ஆராய்ச்சி மாணவியான ரேகா ராஜேஷ் ஆகியோர் இதற்கான ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆராய்ச்சியின் முக்கிய செயல்பாடுகள் குறித்து சத்தியநாராயணா கும்மடி கூறும்போது, "குறைந்த செலவில் லிக்னோசெல்லுலோசிக் (lignocellulosic) கழிவுகளை முன்பதப்படுத்துதல் ஏதுமின்றி பிரிக்கும் திறன் கொண்ட உயிரியை தனிமைப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் நொதிகளின் உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்சிதை மாற்றங்களுக்காக மேற்கொள்ளப்படும் உயிரிச் செயலாக்கத்திற்கான செலவு குறையும்.
சென்னை ஐஐடி உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அணுகுமுறை:சுற்றுச்சூழலுக்கு குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் முன்பதப்படுத்துதல், நொதிகளை நீராற்பகுத்தல், நுண்ணுயிரி நொதித்தல் ஆகியவற்றை ஒரே சமயத்தில் மேற்கொள்ளுதல் என்பது உயிரியல் மாற்றத்தில் மிகச் சவாலான அம்சமாகும். கரும்பாலைக் கழிவுகளில் இருந்து புதிய திரிபு ஒன்றைத் தனிமைப்படுத்துவதில் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுமையான ஒற்றை நுண்ணுயிரியைப் பயன்படுத்தி வெவ்வேறு வேளாண்மை கசடுகளை சர்க்கரையாக்குதல் மற்றும் நொதித்தல் ஆகியவற்றை செய்ய முடியும். புதுப்பிக்கத்தக்க உயிரி எரிபொருளை உருவாக்கும் வகையில் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அணுகுமுறை மேற்கொள்ளப்படுகிறது.
மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள்:ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 100 முதல் 150 டன் எடைகொண்ட உயிரி உற்பத்தி செய்யப்படுகிறது. வேளாண்மை கழிவுகளைப் பயன்படுத்தி தொழில்துறை நொதிகள் மற்றும் இரண்டாம் தலைமுறை எரிபொருளான எத்தனால் ஆகியவற்றை தயாரிப்பதில் அண்மைக்காலமாக உலகளவில் அதிக ஆர்வம் காணப்படுகிறது. வேளாண்மை கழிவுகளான கோதுமை தவிடு, ஜவ்வரிசி கழிவு, அரிசி தவிடு ஆகிய குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய இந்தக் கழிவுகள் தொழில்துறை நொதிகளை உருவாக்கும் வகையில் அதிக ஆற்றலைக் கொண்டிருக்கின்றன.
இருப்பினும், இந்தக் கழிவுகளில் உள்ள சிக்கலான அமைப்புமுறை நொதிகளை நீர்த்துப் போகச் செய்யும் பணியை கடினமாக்குகிறது. இதற்கான பதப்படுத்தும் நடைமுறைகளும் அதிக செலவு பிடிக்கக்கூடியதாகும். இதனால்தான், கரும்புக் கழிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாசிலஸ் எஸ்பி பிஎம்06 (Bacillus sp PM06) பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
தொழில்துறை நொதிகள் மற்றும் வேளாண் கழிவுகளில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை உருவாக்க இந்த பாக்டீரியா உதவிகரமாக இருந்தது. கோதுமை தவிடு அதிகளவு பயன்தரக் கூடியதாகவும், அதற்கு அடுத்த நிலையில் ஜவ்வரிசி கழிவு, அரிசி தவிடு ஆகியவை இருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும், இந்த செயலாக்க முறை சிக்கனமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையிலும் அமைந்துள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேனி முதல் தேசிய அகாடமி வரை - போலீஸ் தமிழனின் புதிய பதவி இதுதான்!