தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

IIT Madras: சென்னை ஐஐடிக்கு ரூ.231 கோடி சமூக பொறுப்பு நிதி! - முதல்வர் மகேஷ் பஞ்சக்நுலா

சென்னை ஐஐடிக்கு முன்னாள் மாணவர்கள், தொழில்துறையினர், தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ஆகியோரிடம் இருந்து 2022 - 2023-ஆம் ஆண்டில் ரூ.231 கோடி சமூக பொறுப்பு நிதி திரட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

chennai iit
chennai iit

By

Published : Jun 19, 2023, 5:01 PM IST

சென்னை: சென்ன்னை ஐஐடி(IIT Madras) மற்றும் அதன் முன்னாள் மாணவர்கள், தொழில்துறையினர், தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ஆகியோரிடம் இருந்து ரூ.231 கோடி நிதியை 2022-23ம் ஆண்டில் திரட்டியுள்ளது. சமூகப் பங்களிப்பு திட்டத்தின் கீழ் திட்டங்களை செயல்படுத்த ஒரே நிதியாண்டில் திரட்டப்பட்ட அதிகபட்சத் தொகை இதுவாகும்.

நிதி திரட்டலைப் பொறுத்தவரை 2022-ல் திரட்டப்பட்ட ரூ.131 கோடியுடன் ஒப்பிடுகையில் 76 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ரூ.1 கோடிக்கு மேல் இக்கல்வி நிறுவனத்திற்கு நிதி வழங்கிய நன்கொடையாளர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 64 சதவீதம் அதிகரித்துள்ளது.

முன்னாள் மாணவர்கள் தொழில்துறையினரிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி கடந்த 10 ஆண்டுகளில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம், மானியங்கள் ஆகியவற்றின் மூலகமாவும் நிதி திரட்டப்பட்டது.

சென்னை ஐஐடியின் வளர்ச்சிக்காக இந்தியா மற்றும் உலகளவில் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் மட்டும் ரூ.96 கோடி அளவுக்கு தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, குறிப்பிட்ட பொருள் குறித்த ஆய்வுக்கான ஆராய்ச்சிப் பேராசிரியர்களை நியமித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளன.

சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள் முதல்வர் மகேஷ் பஞ்சக்நுலா கூறும்போது, "சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள், தங்களுக்குப் பின் கல்வி பயிலும் மாணவர்கள் மீது காட்டும் அன்பும் பாசமும் நெகிழச் செய்கிறது. ஒவ்வோர் ஆண்டும் முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் நன்கொடையாளர்கள் அளித்து வரும் ஆதரவானது சர்வதேச அரங்கில் ஐஐடியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. அவர்களின் நீடித்த ஆதரவுடன் வரும் ஆண்டுகளில் இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொள்வோம்.

சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 56 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 40 புதிய நிறுவனங்கள் கூட்டு முயற்சியில் கைகோர்த்துள்ளன. சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் மூலமாக எரிசக்தி, சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகள் மட்டுமின்றி பல்வேறு ஆராய்ச்சிகளிலும் நன்கொடையாளர்கள் இணைந்து செயல்படுகின்றனர்" என்றார்.

2023-24ம் நிதியாண்டிற்கான இக்கல்வி நிறுவனத்தின் முக்கிய நிதி திரட்டும் இலக்குகளாக, முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும், அமெரிக்காவிலும் முன்னாள் மாணவர்களிடையே நிதி திரட்டும் குழுவை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதையும் படிங்க:'இளைஞர்கள் தொழில் முனைவோராக மாறினால் மத்திய அரசு கைக்கொடுக்க தயார்' - மத்திய அமைச்சர் வி.பி.சிங் அட்வைஸ்

ABOUT THE AUTHOR

...view details