வளாக நேர்காணலில் தேர்ச்சி பெற்று பணிகளை பெறுவதற்காக மாணவர்களுக்கு பயிற்சி மையங்கள் சார்பில் திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடத்தப்படும். ஆனால், கரோனா பாதிப்பால் இம்மாதிரியான வகுப்புகளை நடத்துவதை பயிற்சி மையங்கள் நிறுத்திக் கொண்டுள்ளது. இந்நிலையில், குவி என்ற ஸ்டார்ட் அப் தொண்டு நிறுவனம் ஐஐடி மெட்ராஸ் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் திறன் மேம்பாட்டு வகுப்புகளை 30 நாள்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளது.
சிறந்த நிறுவனங்களைச் சேர்ந்த 100 தொழில்நுட்பவியலாளர்கள் இந்த வகுப்புகளை நடத்த தானாக முன்வந்துள்ளனர். இதுகுறித்து குவியின் தலைமை செயல் அலுவலர் பாலமுருகன் கூறுகையில், "மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே நேரத்தில், பணிகளை பெறுவதற்கான திறன்கள் உண்டா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு இந்த தொண்டு சிறியதாக இருந்தாலும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.