தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஐஐடி 5ஜி நெட்வொர்க் தேஜாஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம்.. 6 ஜி நெட்வொர்க் தயாரிக்கும் பணிகள் துவக்கம்!

5G Testbed IIT Madras: சென்னை ஐஐடி 5ஜி தொழில்நுட்பத்தை தேஜஸ் நிறுவனம் பயன்படுத்த 12 கோடிக்கு ஒப்பந்தம் செய்து உரிமம் வழங்கி உள்ளது. மேலும், அடுத்த தலைமுறை நெட்வொர்க் சேவையான 6ஜி தொழில் நுட்பத்தை கண்டறிவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

5G Testbed IIT Madras 6G network update with Tejas
சென்னை ஐஐடி தேஜஸ் நிறுவனத்துடன் 5ஜி ஒப்பந்தம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 10:49 PM IST

Updated : Dec 12, 2023, 6:47 AM IST

சென்னை ஐஐடி 5ஜி நெட்வொர்க் தேஜாஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் 6 ஜி நெட்வொர்க் தயாரிக்கும் பணிகள் துவக்கம்

சென்னை: சென்னை ஐஐடி இந்தியாவின் ஊரகப் பகுதியில் குறைந்த செலவில் 5ஜி நெட்வொர்க் சேவை தொடர்பை சிறந்த முறையில் அளிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டது. ஊரகப் பகுதி தகவல் தொழில்நுட்ப தொடர்புக்கு 5ஜி அடிப்படை நிலையத்தை குறைந்த செலவில் உருவாக்குவது இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

இந்த நிலையில், சென்னை ஐஐடி கண்டுபிடித்த 5ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தை தேஜாஸ் நெட்வொர்க் நிறுவனம் பயன்படுத்திக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி மற்றும் முன்னாள் ஐஐடி இயக்குனரும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியருமான பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோருடன் தேஜாஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் குமார் சிவரஞ்சன் செய்துகொண்டார். மேலும், இந்த தொழில்நுட்ப சேவையை பயன்படுத்திக் கொள்வதற்காக சென்னை ஐஐடி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ரூ.12 கோடி உரிமம் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈடிவி பாரத்திற்கு ஐஐடி இயக்குனர் காமகோடி மற்றும் முன்னாள் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் இன்று (டிச.11) அளித்த சிறப்பு பேட்டியில், 'இந்தியாவைச் சார்ந்த தேஜஸ் நெட்வொர்க் நிறுவனத்திற்கு முதன் முதலாக ஒரு 5ஜி நெட்வொர்க் சேவை வழங்குவதற்குரிய ஒப்பந்தம் கிடைத்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து தேஜஸ் நிறுவனம் செயல்பட உள்ளனர்.

5ஜி நெட்வொர்க் சேவையில் இரண்டு பெரிய செயல்பாடுகள் உள்ளன. போன் மூலம் நாம் பேசுவதையோ, புள்ளி விபத் தகவல்களையோ சிக்னலாக மாற்றி டவருக்கு அனுப்பும். மீண்டும் டவர் அங்கிருந்து பேசியதையும் புள்ளிவிபர தகவல்களையும் சிக்னலாக மாற்றி செல்போனுக்கு அனுப்பும். இந்த செயல்பாட்டை நாம் ரேடியோ ஆக்சஸ் நெட்வொர்க் எனக் கூறுகிறோம். டவரில் சேமிக்கப்பட்ட தகவல்கள் மீண்டும் சிக்னலாக செல்வதை கோர் நெட்வொர்க் என கூறுகிறோம்.

தேஜஸ் நெட்வொர்க் நிறுவனத்திற்கு ரேடியோ ஆக்சஸ் நெட்வொர்க் தொழில்நுட்பத்தை அளித்துள்ளோம். ஏற்கனவே, பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் ரேடியோ ஆக்சஸ் நெட்வொர்க் சேவை 4ஜியில் அளித்து வருகின்றனர். அடுத்து பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்தும்போது, நாம் அளித்த 5ஜி தொழில்நுட்பம் வரும் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் முதல்முறையாக உள்நாட்டு நிறுவனம் நெட்வொர்க்கை மேம்படுத்துவது இதுதான் முதல்முறை.

5ஜி நெட்வொர்க் அதிவேகமாக கிடைப்பதற்காக மைமோ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளோம். 5ஜி-ஐத் தொடர்ந்து 6ஜி நெட்வொர்க் மேம்படுத்துவதற்கான பணிகளையும் துவக்கி உள்ளோம்.

செல்போன் ஆரம்பித்த முதலில் 2ஜி அடுத்து3 ஜி, தற்போது 4ஜி பயன்பாட்டில் உள்ளது. 4ஜி-ல் தகவல்கள் வேகமாக கிடைக்கின்றன. 4ஜி மேம்பாடுதான் 5ஜி. 6ஜி நெட்வொர்க் கட்டாயம் வரும். ஒவ்வொரு பத்தாண்டிற்கு ஒருமுறை ஒரு ஜி வரும். 2030ஆம் ஆண்டில் 6ஜி வரும். உலகில் எங்கு சென்றாலும் ஒரே தொழில்நுட்பத்தை தான் பயன்படுத்துவார்கள். உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் எங்கு சென்றாலும் நெட்வொர்க் வேலை செய்ய வேண்டும் என்பதால் ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனியாக வைத்துக் கொள்ள முடியாது.

6ஜி நெட்வொர்க் சேவை வரும்போது இந்தியாவில் இருந்து அதிக அளவில் ஆலோசனைகள் இருக்க வேண்டும் என்பது அரசின் எண்ணமாக இருக்கிறது. அதற்காக, கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலைகள் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்த தொழில்நுட்பத்தில் இந்தியாவில் இருந்து வாங்கும் கம்பெனிகள் இருக்கும். அதேநேரத்தில், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அதிகளவு தொழில் நுட்பங்களும் அதற்கான காப்புரிமைகளும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இதற்காக தான், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை பல்வேறு அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அப்பொழுதுதான் உலகில் உள்ள தகவல் தொழில்நுட்ப சந்தையில் இந்தியாவிற்கும் ஒரு பங்கு இருக்கும். ரேடியோ நெட்வொர்க் அக்சஸ் உலகில் மொத்தம் ஆறு கம்பெனிகள்தான் இருக்கின்றன. அது தற்பொழுது, தேஜஸ் நிறுவனம் இணைந்துள்ளது. இந்தியாவில் இருந்து தற்போது முதல் கம்பெனி வந்துள்ளது. மேலும், கம்பெனிகள் வரவேண்டும். மத்திய அரசின் நோக்கமாகவும், எங்களின் நோக்கமாகவும் இதுதான் இருந்து வருகிறது.

ஏற்கனவே, 5ஜி நெட்வொர்க் வந்துள்ளது. 5ஜி நெட்வொர்க் இருக்கும் இடத்திற்கு சென்றால், டேட்டா வேகம் அதிகமாக இருக்கும்; அதற்கு காரணம், மைமோ தொழில்நுட்பம். மைமோ தொழில்நுட்பத்தில் செல்போன் டவரில் வைக்கப்பட்டுள்ள ஆன்டனாக்கள் மூலமும் ஃபோனில் உள்ள ஆன்டனாக்கள் மூலமும் ஒரே நேரத்தில் பல முறையில் இருந்து வரும் தகவல்கள் அதே நேரத்தில் சேகரிக்கப்பட்டு, ரேடியோ சிக்னல் மூலம் சரியாக செய்தால் ஒரு ஃப்ரீகுவன்சியில் நிறைய காட்டுனா வைத்து நிறைய டேட்டாக்களை அனுப்ப முடியும். 5ஜி தொழில்நுட்பத்தில் மைமோ அதிக அளவில் கொண்டு வந்துள்ளனர்.

5ஜி தொழில்நுட்ப சேவையை தேஜஸ் நிறுவனத்திற்கு மட்டும் தனிப்பட்ட முறையில் ஒதுக்கீடு செய்து கொடுக்கவில்லை. வேறு நிறுவனங்கள் வந்து கேட்டாலும் கொடுக்கப்படும். ஐஐடி ஆராய்ச்சியில் ஈடுபடுவதால் தொழில்நுட்பத்திற்கு முன்கூட்டியே ஆராய்ச்சி செய்வதற்கான தொகையை பெற்றுக் கொண்டு கொடுத்துள்ளோம். மேலும், 5ஜி தொழில்நுட்பத்தை தேஜஸ் நிறுவனம் மேம்படுத்தி சேவையை வழங்க வேண்டும்.

5ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்தில் வினாடிக்கு ஒரு ஜீகா பைட் வேகம் வரை வருகிறது. வள்ளியூர் போன்ற கிராமப்புறங்களிலும் ஒரு வினாடிக்கு 100 மெகா பைட் வருகிறது. 4ஜியில் 5 MB-க்கு மேல் வராது. 5ஜி நெட்வொர்க்கில் பத்து மடங்கு வேகமாக வர தொடங்கி உள்ளது. 5ஜி தொழில்நுட்பத்திற்கு அடுத்த தலைமுறைக்கான 6ஜி தொழில்நுட்பம் உற்பத்தி செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆரம்ப கட்ட ஆராய்ச்சி பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 5ஜி அட்வான்ஸ் அதனைத் தொடர்ந்து சிக்கி தொழில்நுட்பம் வரும். 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் இருந்து தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 90 மில்லியன் மக்கள் கிராமங்களில் உள்ளனர். இந்தியாவில் இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தொலைவில் புதிய புதிய கிராமங்கள் உள்ளன.

அங்குள்ள மக்களுக்கு நெட்வொர்க் கொடுப்பது 4ஜி யில் சரியான தொழில்நுட்பம் கிடையாது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் கிராமங்களிலும் நெட்வொர்க் சேவை கிடைக்கும் வகையில் தொழில்நுட்பம் கண்டுபிடித்து அதனையும் சேர்த்துள்ளோம். 6ஜி நெட்வொர்க் சேவையில் உலக அளவில் என்னென்ன தேவை? என்பதை முடிவு செய்துள்ளனர். அதில், இந்தியாவிலிருந்து அளிக்கப்பட்ட பரிந்துரைகளான, எங்கிருந்தாலும் இணைய தொடர்பு கிடைக்க வேண்டும். அப்பர் டபுள் டி மற்றும் விலை குறைப்பும் இருக்க வேண்டுமென கூறினோம். அது மூன்றையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆராய்ச்சி செய்து நாம் கொடுத்தால் அது அதில் வரும். 5ஜி நெட்வொர்க் சேவைக்குரிய கட்டணம் விரைவில் குறையத் தொடங்கும்.

அனைத்துப் பகுதிகளிலும் நெட்வொர்க் சேவை கிடைப்பதற்கு டவர் அதிக அளவில் போட வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இந்தியாவில் எங்கு நெட்வொர்க் இல்லாமல் இருக்கிறதோ அங்கு சென்று தவறு அமைக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. எனவே 4ஜி நெட்வொர்க் சேவை தொடர்ந்து 4ஜி நெட்வொர்க் சேவை அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும்' என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:உங்க குழந்தையும் மொபைல் அடிக்ட்டா?... இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்!

Last Updated : Dec 12, 2023, 6:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details