தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய தரவரிசைப்பட்டியலில் இடம்பெற பிற கல்லூரிகளுக்கும் சென்னை ஐஐடி ஆலோசனை வழங்கத்தயார்!

சென்னை ஐஐடி நிறுவனம் தேசிய தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள பிற உயர் கல்வி நிறுவனங்களும் இடம் பெறுவதற்குத்தேவையான ஆலோசனைகளை வழங்கும் என அதன் இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.

தேசிய தரவரிசைப் பட்டியலில் இடம்பெற சென்னை ஐஐடி ஆலோசனை வழங்கும்
தேசிய தரவரிசைப் பட்டியலில் இடம்பெற சென்னை ஐஐடி ஆலோசனை வழங்கும்

By

Published : Aug 4, 2022, 6:55 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் உயர் கல்விச்சிறப்பு குறித்த செவ்வரங்கம் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது‌. அதில் தேசிய தரவரிசையில் சிறப்பான இடங்களைப் பிடித்த உயர்கல்வி நிறுவனங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கவுரவித்தார்.

இந்த நிகழ்வில் உயர் கல்வித்துறைத்துறை அமைச்சர் பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, பல்கலைக்கழக துணைவேந்தர்கள், தனியார் கல்லூரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, 'தேசிய தரவரிசைப்பட்டியலில் இடம் பெற்ற கல்வி நிறுவனங்களை அழைத்து தமிழ்நாடு ஆளுநர் பரிசு வழங்கிப்பாராட்டினார். இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேசிய அளவிலான தரவரிசைப்பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 18 விழுக்காடு கல்வி நிறுவனங்கள் இடம் பெற்று முதலிடத்தில் உள்ளது.

2ஆவது இடத்தில் 9 விழுக்காடு கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய தரவரிசைப்பட்டியலில் இடம் பெறுவதற்கு அளித்த தகவல்களையும், அதில் தவற விட்ட தகவல்களையும் பிற கல்வி நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். இதன் மூலம் வரும் ஆண்டில் அதிகளவில் தமிழ்நாட்டிலிருந்து கல்வி நிறுவனங்கள் தேசிய தர வரிசைப்பட்டியிலில் இடம்பெறும்.

சென்னை ஐஐடி நிறுவனம் தேசிய தரவரிசைப்பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள பிற உயர்கல்வி நிறுவனங்களும் இடம் பெறுவதற்குத்தேவையான ஆலோசனைகளை வழங்கும்’ எனவும் தெரிவித்தார்.

தேசிய தரவரிசைப்பட்டியலில் இடம்பெற பிற கல்லூரிகளுக்கும் சென்னை ஐஐடி ஆலோசனை வழங்கத்தயார்!

இதையும் படிங்க:தேசிய தரவரிசையில் சிறப்பான இடங்களை பிடித்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு கெளரவம் - ஆளுநர், அமைச்சர்கள் பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details