தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

IPL 2023: ஐபிஎல் தொடர்பாக சென்னை ஐஐடியில் போட்டி.. நீங்கள் பங்கேற்க என்ன செய்ய வேண்டும்? - audience play with AI

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்கவிருக்கும் நிலையில், தரவு அறிவியல் போட்டியை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 31, 2023, 1:59 PM IST

சென்னை: இன்று (31 மார்ச் ) தொடங்கவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL)-ஐ அடிப்படையாகக் கொண்டு சென்னை ஐஐடியின் பிஎஸ் பட்டப்படிப்பு (டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ்), என்பிடெல் ஆகியவை, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (ML) போன்ற மாதிரிகளை உருவாக்குவதற்கான போட்டியையும் தொடங்கியுள்ளன.

'கிரிக்கெட் அண்ட் கோடிங்' என்ற தலைப்பிலான இந்த தரவு அறிவியல் போட்டிக்காக செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் போன்ற நுட்பங்களின் மூலம் திறமையான மாதிரிகளை உருவாக்கி அதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் தரவை பகுப்பாய்வு மேற்கொள்ளப்படும் என தரவு விஞ்ஞானிகள் மற்றும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இப்போட்டிக்குப் பதிவு செய்வதற்கான கடைசி நாள் ஏப்ரல் 13 என்பதனால் ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பைப் பயன்படுத்திப் பதிவு செய்து பங்கேற்கலாம் - ”https://study.iitm.ac.in/ipl-contest.”

கோடிங்-கில் அடிப்படை அறிவும், தரவு அறிவியலில் ஆர்வமும் கொண்ட எவரும் தங்களைப் பதிவு செய்துகொண்டு போட்டியில் இடம்பெறலாம். கோடிங் சவால் மட்டுமின்றி, கூடுதல் சிறப்பாக கோடிங் தெரியாதவர்களும் இதில் இடம்பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புரோகிராமர்கள் அல்லாதோர் எந்தவொரு கோடிங்கும் எழுதாமல் 'ஸ்கோரை ஊகித்தல்' என்ற போட்டியில்லா நிகழ்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடி பிஎஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ், என்பிடெல் ஆகிய துறைகளின் பேராசிரியர் ஆன்ட்ரூ தங்கராஜ் கூறுகையில், "விளையாட்டு, தரவு அறிவியல் ஆகிய இரு உலகங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இப்போட்டியைத் தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.பி.எல்., தரவு அறிவியல் ஆகிய இரண்டுமே தற்போது அதிகளவில் பிரபலமடைந்து வரும் நிலையில், தரவு அறிவியலைப் பற்றி கற்கவும் எண்ணிக்கை கணிசமாக தொடங்கியுள்ளது. மேலும் அதனை கற்பதோடு மட்டுமில்லாமல் அதன் பகுப்பாய்வுத் திறன்களை இது போன்று குறைந்தபட்ச துறைகளில் வெளிப்படுத்த இப்போட்டி ஒரு வாய்ப்பாக அமையும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

கடந்த ஐபிஎல் ஆட்டங்களின்போது ஆட்ட வீரர்களின் செயல்திறன், அணியின் செயல்திறன், போட்டி முடிவுகள் எவ்வாறு இருந்தன போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்ட தரவுத் தொகுப்புகள் போட்டியின் பார்வையாளர்கள் மத்தியில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இதைத்தொடர்ந்து இந்தாண்டிற்கான ஐபிஎல் ஆட்டங்களில் குறிப்பாக ஒவ்வொரு அணிகளின் 'பவர் பிளே' ஸ்கோர்கள் பற்றிய கணிப்புகளை உருவாக்க இந்த தரவைப் பயன்படுத்தப்படுவது இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போட்டிகள் இந்தாண்டின் ஐபிஎல் சீசன் முழுவதும் நடத்தப்படும் என்றும் உண்மையான மற்றும் கணிக்கப்படும் மதிப்பெண்களுக்கு இடையேயான வேறுபாடுகளின் அடிப்படையில் பங்கேற்பாளர்கள் அவர்களது புள்ளிகளைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டியின் நிறைவில் சிறப்பாகச் செயல்படும் பங்கேற்பாளர்களுக்கு 'பாரடாக்ஸ் 2023' எனப்படும் வருடாந்திர பி.எஸ். புரோகிராம் தொழில்நுட்ப மற்றும் கலாச்சார நிகழ்வில், பரிசுகளுடன் கவுரவமும் அங்கீகாரமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:WPL 2023: கோப்பையை வென்று வாகை சூடிய மும்பை அணி

ABOUT THE AUTHOR

...view details