தகுதிக்கேற்ற ஊதியம் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவர் பணியிடங்களை நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும், தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும், பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்தரநாத் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FOGDA) சார்பாக நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது.