வனப்பகுதிகளில் உள்ள ரயில் வழித்தடங்களில் யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ரயில் வழித்தடம் அருகே 18 கோடி ரூபாய் மதிப்பில் சோலார் விளக்கு திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ரயில்வே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடத்தில் இரவு நேர ரயில் சேவையை நிறுத்த உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.
கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடம் முக்கியமானது என்பதால் அது போன்ற உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டாம் என ரயில்வே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
கடினமான மலைப்பாதையில் ரயிலை இயக்கும் தொழில்நுட்பம் உள்ள போது இந்த உத்தரவை உங்களால் செயல்படுத்த முடியாதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குறிப்பிட்ட வழித்தடத்தில் ஏற்படும் விபத்துக்களால் வருடத்திற்கு ஐந்து, ஆறு யானைகள் உயிரிழப்பதாக தெரிவித்தனர்.
எனவே குறிப்பிட்ட வழித்தடத்தில் இரவில் ரயில்களை 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி மூன்றாவது வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க :ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலையானது வருத்தமளிக்கிறது - விஜய் வசந்த் எம்.பி.