தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதாரங்களை தர மறுக்கும் பொன்.மாணிக்கவேல்! - வழக்கு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிரான வழக்கு ஆவணங்களை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் வழங்க மறுப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

chennai high court

By

Published : Aug 3, 2019, 1:55 AM IST

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக இந்து சமய அறநிலையத் துறை திருப்பணிப் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து தமிழ்நாடு அரசு அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியமர்த்தக் கோரி கவிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன். மாணிக்கவேல் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது அரசிற்கும் மனுதாரருக்கும் இடையேயான விவகாரம் எனவும், இதில் சிறப்பு அதிகாரியின் விளக்கத்தை கேட்க வேண்டிய அவசியமில்லை என மனுதாரர் கவிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், உயர்நீதிமன்றத்தின் வாய்மொழி உத்தரவை காரணம் காட்டி இந்து சமய அறிநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா மீதான வழக்கு ஆவணங்களை பொன். மாணிக்கவேல் தர மறுப்பதாகவும், இதனால் துறை ரீதியான விசாரணை நடத்த முடியவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அரசு தன் வசம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்கும்படி அரசு தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதி, கவிதாவின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details