தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'போராட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் விருது கிடையாது' - அரசு - போராட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் விருது கிடையாது

சென்னை: மத்திய அரசின் ஐ.சி.டி விருதுக்கு போராட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர்கள்களை பரிந்துரை செய்யக்கூடாது என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

school-education-department
school-education-department

By

Published : Mar 3, 2020, 12:01 PM IST

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கையில், 'கடந்த 2018-19ஆம் ஆண்டுகளில் அனைத்து தொடக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தகவல்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஐ.சி.டி. விருது வழங்கவிருக்கிறது. அதற்குத்தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பட்டியலை ஜூலை இறுதிக்குள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்கவேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை

அவற்றில் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளானவர்கள், நீதிமன்ற வழக்கு, குற்றவியல் நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள் ஆகியோரை பரிந்துரை செய்யக்கூடாது. மேலும், ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், துறைசார்ந்த நடவடிக்கைக்குள்ளானவர்களும் பரிந்துரைப் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார்கள். குறிப்பாக பாலியல் குற்றவழக்கு நிலுவையில் உள்ள 171 ஆசிரியர்கள் இதில் அடக்கம்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கோடையில் பறவையினங்களைக் காப்போருக்கு 'பறவை மனிதர்' விருது

ABOUT THE AUTHOR

...view details