தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் - ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழ்நாட்டில் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ias officers sudden transfer
ias officers sudden transfer

By

Published : Jun 1, 2021, 9:45 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:

1. நில நிர்வாக சீர்திருத்தத்துறையின் ஆணையராக பணியாற்றிய ஜக் மோகன் சிங் ராஜூ, தமிழ்நாடு இல்லத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

2. சத்துணவு மற்றும் சமூகநலத்துறையின் முன்னாள் செயலாளர் மதுமதி, ஆதிதிராவிடர் நலத்துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. குடிமைப் பொருள் வழங்கல் துறையின் முன்னாள் ஆணையர் சஜஜன் சிங் ஆர்.சவான், மீன்வளத்துறையின் உதவி ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார்.

4. சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ராமன், தோட்டக்கலைத்துறையின் இயக்குனராக நியமனம் செய்யப்படுகிறார். மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் அன்பழகன், சர்க்கரை ஆணையத்தில் உதவி ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார்.

5. ஒருங்கிணைந்தப்பள்ளிக்கல்வி கூடுதல் மாநில திட்ட இயக்குனர் அமிர்த ஜோதி, கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறையின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. தர்மபுரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் கார்த்திகா, உயர் கல்வித்துறையின் இணை செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார்.

7. அஷூஷ் சட்டர்ஜூ தமிழ்நாடு இல்லத்தில் நியமனம் செய்யப்படுகிறார்.

8. திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநராக சந்திரகாந்த் பி.கும்பிளே நியமனம் செய்யப்படுகிறார்.

9. தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் கழகத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குநர் சுதாதேவி, நீர்நிலை மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: முன்விரோதமாக காரணமாக இளைஞர் கொலை: 5 பேர் கைது கைது!

ABOUT THE AUTHOR

...view details