தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு - tamilnadu ias,ips officers changed

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ias-and-ips-officials-got-transfer
ias-and-ips-officials-got-transfer

By

Published : Oct 24, 2020, 9:26 PM IST

தமிழ்நாட்டில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎல் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி கரூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மதுரைக்கும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா திருவாரூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நிதித்துறையின் இணை செயலராக இருந்த அரவிந்த ஐஏஎஸ் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். பட்டுப்பூச்சி வளர்ச்சித் துறை இயக்குநர் வெங்க பிரியா, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த வினய் பட்டுப்பூச்சி வளர்ச்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கூடுதல் தலைமைச் செயலராக இருந்த அபூர்வா விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பதிவுத் துறை ஐஜியாக சங்கரும், TANGEDCO மேலாண் இயக்குநராக பிரசாந்த் வடநேரேவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதாரத் துறையின் திட்ட இயக்குநராக இருந்த அஜய் யாதவ், இணைச் செயலராகவும், இணைச் செயலராக இருந்த சிவஞானம் திட்ட இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:என் மீது வழக்குப்பதிவு செய்ததை வரவேற்கிறேன் - தொல்.திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details