தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவுக்கு எதிரான ஆதாரத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன்: தமிழிசை அதிரடி! - appropriate time

சென்னை: பாஜகவுடன் திமுக பேசிய ஆதாரத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

By

Published : May 15, 2019, 7:56 PM IST

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "பொய் சொல்வது திமுகவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பழக்கமான ஒன்று. நான் பொய் சொல்லும் பாரம்பரியத்தில் இருந்து வரவில்லை. திமுக பாஜகவுடன் பேசி ஆதாரத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன்.

திமுக ஒரு நிறம் மாறக்கூடிய கட்சி. ஏற்கனவே விஜயகாந்த் கூட்டணிக்காக சந்தித்துவிட்டு மரியாதை நிமித்தம் என்று சொன்னார்கள். அது போலதான் சந்திரசேகரராவ் ஸ்டாலின் சந்திப்பும். மேற்கு வங்கத்தில் ஏன் ராகுலை பிரதமர் ஆக முன்மொழியவில்லை. ஆதலால், திமுகவுக்கு மூன்று முகங்கள் உள்ளது. பாஜகவுடன் திமுக கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பே இல்லை" என்றார்.

தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அவர், "தீவிரவாதத்திற்கும் மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கோட்சே குற்றவாளியாக இருந்ததால்தான் அவர் தூக்கிலிடப்பட்டார். செத்து மடிந்த ஒரு பிரச்னையை இன்றைக்கு பேசுவதற்கு என்ன அவசியம் வந்துவிட்டது" எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details