தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியலில் இருந்து ஒதுங்கும் சசிகலாவின் முடிவை வரவேற்கிறேன் - எல். முருகன் - சென்னை செய்திகள்

சென்னை : அரசியலில் இருந்து ஒதுங்கும் வி.கே.சசிகலாவின் அறிவிப்பை வரவேற்கிறேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.

அரசியலில் இருந்து ஒதுங்கும் சசிகலாவின் முடிவை வரவேற்கிறேன் - எல். முருகன்
அரசியலில் இருந்து ஒதுங்கும் சசிகலாவின் முடிவை வரவேற்கிறேன் - எல். முருகன்

By

Published : Mar 4, 2021, 2:27 AM IST

அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன் என வி.கே.சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பாஜக தமிழ்நாடு தலைவர் எல்.முருகன் இன்று (மார்ச் 3) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சசிகலா சொல்லியிருக்கிற காரணங்களை அரசியல் ரீதியாக அனைவரும் வரவேற்க வேண்டும். நம்முடைய பொது எதிரி, தீயசக்தி திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்திட நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று, அவருடைய விருப்பங்களையும் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன்

தமிழ்நாடு வளர்ச்சிக்கும், தேசத்தின் வளர்ச்சிக்கும் எதிராக விளங்கக்கூடிய திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் அவருடைய முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது.

அவரால் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி எப்படியாவது தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு கண்டவர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறார். அவருடைய அறிவிப்பை முழுமனதோடு வரவேற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க :'சசிகலாவின் முடிவு எனக்கு சோர்வு' -டிடிவி வருத்தம்

ABOUT THE AUTHOR

...view details