சென்னை:சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 14.01.2023 சனிக்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் செயல்பாட்டிலிருந்து விலக்கு அளித்தும், தைப்பூசம் 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நிகழ உள்ள நிலையில் அன்றைய தினம் மாநிலத்தில் செயல்படும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் இயங்கிட ஏற்கனவே அரசால் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததற்கு விலக்களித்தும் உத்திரவிடுமாறு தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்திடமிருந்து வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, மேற்கூறிய 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 14.01.2023 (சனிக்கிழமை) அன்று செயல்படுவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது.
சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை நாட்கள்.. தமிழக அரசு அறிவிப்பு.. - தமிழ்நாடு சார்பதிவாளர்
சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் நாளை, மற்றும் தைப்பூசம் தினத்தனத்தை முன்னிட்டு இயங்காது என வணிகவரி, பதிவுத்துறை அறிவித்துள்ளது.
100 சார்பதிவாளர் அலுவலகங்கள் நாளை, தைப்பூசம் தினத்தனறு இயங்காது- பதிவுத்துறை அறிவிப்பு..!
மேலும் மாநிலத்தில் செயல்படும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தைப்பூசத்தை முன்னிட்டு இயங்கிட ஏற்கனவே அரசால் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததற்கும் விலக்களிக்கப்படுகிறது. இவ்விரண்டு தினங்களைத் தவிர இனிவரும் சனிக்கிழமைகளில் மேற்சொன்ன 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'பாஜக தமிழ்நாட்டை குறிவைத்துவிட்டது: யார் விராட்டுகிறார்களோ இல்லையோ சிறுத்தைகள் விரட்டும்'