சென்னை: ஜி20 கல்வி மாநாட்டில் பேசிய மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் கூறுகையில், 'இந்தியாவில் 1.48 மில்லியன் பள்ளிகளில், 265 மில்லியன் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்குள் பள்ளி அமைந்திருப்பதை மத்திய அரசு உறுதி செய்து இருக்கிறது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மூன்று கிலோ மீட்டருக்குள் பள்ளிகள் இருக்கின்றன.
ஆரம்ப கல்வி அளவில் நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள குழந்தைகள் 100 சதவிகிதம் அளவிற்கு பள்ளிகளுக்குச் செல்கின்றனர்.