தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி பெயரைக் கேட்ட விவகாரம்: எஸ்.பி. அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு - suo motu cognizance on police caste asking issue

சென்னை: முகக்கவசம் அணியாத நபரிடம் சாதி பெயரைக் கேட்ட விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல்செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணையம்
மனித உரிமைகள் ஆணையம்

By

Published : Oct 12, 2020, 6:19 PM IST

திருப்பூர் மாவட்டம் சேவூர் பாப்பன்குளத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றுள்ளார். பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில், சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சிவக்குமாரை நிறுத்தி சோதனையிட்டனர்.

இந்தச் சோதனையின்போது சிவக்குமார் முகக் கவசம் அணியவில்லை என்பதால் அபராதம் விதிப்பதாகவும், அதற்குப் பெயர், முகவரி போன்ற விவரங்களைக் கூற வேண்டும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அத்தோடு, சாதி என்ற விவரத்தையும் கேட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிவக்குமார், சாதி குறித்து ஏன் கேட்கிறீர்கள்? எனக் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து, வெளியான செய்தியின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது.

வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், சாதி பெயரை காவல் துறை கேட்டது தொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூன்று வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:மாஸ்க் அணியாமல் வந்த தம்பதியிடம் சாதிப் பெயரைக் கேட்ட காவலர் - பணியிடமாற்றம்

ABOUT THE AUTHOR

...view details