தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளியை காவல் துறை தாக்கிய சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு! - மனித உரிமை ஆணையம்

காவல்துறையினர் தாக்கியதில் மாற்று திறனாளி பிரபாகரன் மரணமடைந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய புலன் விசாரணை பிரிவு டிஜிபிக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளியை காவல் துறை தாக்கிய சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு
மாற்றுத்திறனாளியை காவல் துறை தாக்கிய சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு

By

Published : Jan 21, 2022, 7:52 PM IST

நாமக்கல்: சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் வீட்டில் நடந்த நகை திருட்டு வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் சேலம் மாவட்டம் கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பிரபாகரனை ஜனவரி 11ஆம் தேதி சேந்தமங்கலம் காவல்துறையினர் கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.

பின்னர் ஜனவரி 12ஆம் தேதி சிறையில் இருக்கும்போதே, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பிரபாகரன் கூறியதன் அடிப்படையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அன்றைய தினம் இரவு 11:40 மணியளவில் பிரபாகரன் உயிரிழந்தார்.பிரபாகரனின் மரணம் தொடர்பாக சேந்தமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் உள்பட மூன்று பேர் சேலம் டிஐஜியால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி, மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெறவும் ஆணையத்தின் தலைவர் நீதிபதி பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் - 9 காவலர்கள் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details