தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலுவையிலுள்ள கொலை வழக்குகள் எத்தனை? அறிக்கை அளிக்க காவல் ஆணையருக்கு உத்தரவு! - நிலுவையிலுள்ள கொலை வழக்குகள்

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையிலுள்ள கொலை வழக்குகள் எத்தனை என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறிக்கை அளிக்கும்படி காவல் ஆணையருக்கு உத்தரவு
அறிக்கை அளிக்கும்படி காவல் ஆணையருக்கு உத்தரவு

By

Published : Jan 7, 2021, 1:00 PM IST

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் துரைராஜ் என்பவர் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று (ஜன.07) நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகியிருந்தார்.

அவரிடம், சென்னை நகரில் என்ன நடக்கிறது எனவும், கொலை வழக்குகள் 15, 16 ஆண்டுகள் நிலுவையில் இருக்கிறது எனவும் இத்தனை ஆண்டுகள் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணை கைதிகளாக உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

புதிய வழக்குகளில்கூட சாட்சிகள் பல்டி அடித்துவிடும் நிலையில், 15 ஆண்டுகள் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தால், சாட்சி சொல்ல யார் வருவார்கள், எப்படி தண்டனை பெற்று கொடுக்கப்போகிறீர்கள் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதிருப்தியடைந்த நீதிபதி:

மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையிலுள்ள கொலை வழக்குகள் எத்தனை என்பது குறித்து ஜனவரி 25ஆம் தேதி அறிக்கை அளிக்கும்படி, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த அறிக்கையை பார்த்த பின் ஆணையரை அழைத்து விளக்கம் கேட்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுதர்சனம், பவாரியா கொள்ளை கும்பலால் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு எதிரான வழக்கை முடிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பவாரியா கொள்ளைக் கும்பல் தலைவனின் சகோதரர் பிணைக் கேட்டு மனு!

ABOUT THE AUTHOR

...view details