சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 20) தொடங்கியது. நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக சபாநாயகர் அப்பாவு தலைமையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, "சட்டப்பேரவையில் நாளை (மார்ச் 21) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் வரும் 29-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 21-ம் தேதி வரை 15 நாட்கள் நடைபெறுகிறது. நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கையின் மீதான விவாதம் வரும் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறும். அன்றைய தினம் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். சட்டப்பேரவை 15 நாட்கள் காலையிலும், 7 நாட்களும் மாலையிலும் நடக்கும்.