தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டை கட்டமைப்பதில் இல்லத்தரிசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் - உயர் நீதிமன்றம் - விபத்து வழக்கு

மகிழ்வான குடும்பத்தையும், வலுவான நாட்டையும் கட்டமைப்பதில் இல்லத்தரசிகளின் பங்கு முக்கியத்துவம் வகிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

MHC
MHC

By

Published : Sep 5, 2020, 4:31 AM IST

சென்னை: 2017ஆம் ஆண்டு விபத்தால் பாதிக்கப்பட்ட புவனேஷ்வரிக்கு 14 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சேலம் பெரிய வீராணம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த இல்லத்தரசியான புவனேஷ்வரி மீது மணி என்பவருக்கு சொந்தமான தனியார் பேருந்து மோதியது. இந்த விபத்தில் சிக்கிய புவனேஷ்வரிக்கு தண்டு வட பாதிப்பு மற்றும் முன் நாக்கு துண்டானதுடன், 60 சதவீத உடற் குறைபாடு ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சேலம் மாவட்ட மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம், 4 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

இழப்பீட்டை அதிகரித்து வழங்கக் கோரி புவனேஷ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், விபத்தால் பாதிக்கப்பட்ட புவனேஷ்வரிக்கு 14 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என இழப்பீடு தொகையை உயர்த்தி நிர்ணயித்ததுடன், ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் 12 வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இல்லத்தரசியான புனவேஷ்வரியை குடும்பம் இழந்துள்ளதால், இழப்பீட்டை அதிகரித்து வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க இல்லத்தரசிகளின் பங்கு முக்கியம் எனவும், அவர் தலைமையிலான மகிழ்வான குடும்பமே நல்ல சமுதாயத்தை உருவாக்கி, நல்ல நாட்டை கட்டமைக்கும். நாட்டை கட்டமைப்பதில் இல்லத்தரிசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் , குடும்பத்தில் சம்பாதிக்க கூடிய ஒருவர் இறந்துவிட்டால் பெரிய பாதிப்பை ஏற்பாடுத்தாத நிலையில், ஒரு இல்லத்தரசி இறந்துவிட்டால் அந்த குடும்பத்தினர் எண்ணிலடங்காத துன்பத்திற்கு ஆளாவார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details