சென்னை: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் கரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை நேரடி வகுப்புகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே வேளையில் ஆன் லைன் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.