சென்னை:வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 30ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை
அதன் காரணமாக இன்று (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை
- தூத்துக்குடி
- நெல்லை
- புதுக்கோட்டை
- திருவாரூர்
- திருவள்ளூர்
- நாகப்பட்டினம்
- காஞ்சிபுரம்
- அரியலூர்
- பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Tomato price hike: கோயம்பேடு தக்காளி விற்பனை மைதானம் மீண்டும் திறக்கப்படுகிறதா?