சென்னை:தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு விடுமுறை
அதன்படி திருச்சி, தென்காசி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், அரியலூர், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று (நவ.24) முதல் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. எனினும் பல்வேறு இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதற்கிடையில் மழை பொழிவு தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டதால் பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவ- மாணவியர் மழையில் நனைந்தப்படி வீடு போய் சேரும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது ஒருநாள் முன்னதாகவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கலைஞர் உணவகம் அமைக்க நிதி ஒதுக்க ஒன்றிய அரசிடம் திமுக கோரிக்கை