சென்னை: ஹாக்கி உலகக் கோப்பை போட்டி, வரும் ஜனவரி 13ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. அதனையொட்டி ஹாக்கி கோப்பை, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவருகிறது. அந்த வகையில் மும்பையில் இருந்து விமான மூலம் ஹாக்கி கோப்பை சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.
விமான நிலையத்தில் ஹாக்கி கோப்பையை, தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவர் ஜான் மனோகரன் பெற்றுக்கொண்டார். அதன்பின் சென்னை விமான நிலையத்திலிருந்து, வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து ஹாக்கி கோப்பையை காண்பிக்க உள்ளனர்.