தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கணினிகள் மூலம் பாடம் நடத்துவதற்கான ஆய்வகம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் சென்னை ஐஐடி-யைச் சேர்ந்த பேராசிரியர்கள் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கற்பித்தல் முறை குறித்து ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்குநர் சுடலை கண்ணன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் கருப்பசாமி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செப்டம்பர் முதல் அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வக வகுப்பறைகள்! - பள்ளிக் கல்வித்துறை
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 6000 அரசு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் செப்டம்பர் மாதம் முதல் கணினி ஆய்வக வகுப்பறைகள் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை
மேலும், ஆசிரியர்களுக்கான கருத்துக் கேட்புக் கூட்டம், ஆய்வகப் பணிகள் நிறைவடைந்த பிறகு வரும் செப்டம்பர் மாதம் முதல் அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வக வகுப்பறைகள் செயல்பாட்டிற்குவரும் என இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்தார்.