சாராய ஆலைகளை நடத்திவரும் அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் பாலு ஆகியோர், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டுடிருப்பதாகவும், அவர்களது சொத்துக்களை மறு ஆய்வு செய்து அவர்களுக்கு சொந்தமான இடங்களில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் இந்து மக்கள் கட்சியின் சார்பில் புகார் மனு, கொடுக்கப்பட்டுள்ளது.
டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகனுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி புகார் - TR balu
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு மற்றும் அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரின் சொத்துக்களை மறு ஆய்வு செய்யக் கோரி இந்துமக்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கஸக
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நிர்வாகி உமாமகேஸ்வரன், "இத்தேர்தலில் பணத்தை கொடுத்து வெற்றி பெற ஏற்பாடுகள் நடக்கிறது. அவ்வாறு நடந்தால் ஜனநாயகம் தோற்று பணநாயகம் வெற்றி பெற்றுவிடும் என்பதால், ஜெகத்ரட்சகன் மற்றும் பாலு ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ஆய்வு மேற்கொண்டு சொத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளோம்" என்றார்.