சென்னை: சட்டப்பேரவை இன்று (மே.5) கூடியதும் முதலில் வினாக்கள் விடைகள் நேரம் (கேள்வி பதில் நேரம்) நடைபெற்றது. உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது, அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினர் ரவி அரக்கோணத்தில் பிஎச்டி கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "நடப்பாண்டில் 10 பிஎச்டி கல்லூரிகள் ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்தார். மேலும் அந்த பகுதியில் ஆய்வு செய்து அதற்கான வசதிகள் இருந்தால் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என்றார்.
இதேபோல கே.வி.குப்பம் பகுதியில் மகளிர் கலைக் கல்லூரி அமைக்க அரசு ஆவணம் செய்யுமா என கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகன் மூர்த்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, "அந்த பகுதியில் ஏற்கனவே அரசு கலைக் கல்லூரி உள்ளதாக தெரிவித்தார்.