தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் பொன்முடியின் சகோதரர் காலமானார் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்மடி

அமைச்சர் பொன்முடியின் சகோதரர் தியாகராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்.

அமைச்சர் பொன்முடியின் சகோதரர் காலமானார்
அமைச்சர் பொன்முடியின் சகோதரர் காலமானார்

By

Published : Jan 17, 2023, 10:14 AM IST

சென்னை:தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரரும் மருத்துவருமான தியாகராஜன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 65. இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தியாகராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் தம்பியான மருத்துவர் க. தியாகராஜன் (65) மறைவெய்தினார் என்ற செய்தியால் மிகவும் வேதனையுற்றேன்.

உடன்பிறந்த தம்பியை இழந்து தவிக்கும் பொன்முடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் கூறிக்கொண்டு அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வெடிப்பொருளுடன் விரட்டிய கும்பல்.. போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த இளைஞர்கள்..

ABOUT THE AUTHOR

...view details