தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் பல்கலை பேராசிரியர் நியமன முறைகேடு.. விசாரணை குழு அமைப்பு.. - Educational news

சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், விசாரணை குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக விசாரணை குழு - அரசு அதிரடி!
பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக விசாரணை குழு - அரசு அதிரடி!

By

Published : Jan 10, 2023, 6:44 AM IST

சென்னை:பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் நியமன முறைகேடு குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடைபெறுவதாக பல்வேறு புகார்கள் அரசிடம் பெறப்பட்டு வருகின்றன. உடற்கல்வி இயக்குநர் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாதது.

பல்கலைக்கழக நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ஆகிய பதவிகள் இட ஒதுக்கீடு ஆணைப்படி நிரப்பப்படாதது. தமிழ் துறை தலைவர் பெரியசாமி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகளான போலிச்சான்று, தகுதியின்மை ஆகியவை குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இவரை விட பலர் பணியில் சீனியராக இருக்கும்போது பணியில் இளையவரான இவரை ஆட்சி உறுப்பினராக நியமனம் செய்ய பரிந்துரை செய்து விதிகளுக்கு புறம்பாக நியமித்தது.

பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாகும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் குழுவில், பல்கலைக்கழக பிரதிநிதி ஒருவர் இடம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் விதிகளுக்கு புறம்பாக பெரியசாமியை முறைகேடாக நியமித்தது.

பல்வேறு குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட நெல்சன் துணைவேந்தரின் உதவியாளராகவும், இவரின் அனைத்து குற்றங்களிலும் கூட்டாளியாக செயல்பட்ட குழந்தைவேல், பதிவாளர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தில் பிரிவு அலுவலராக பணியாற்றி வரும் ராஜமாணிக்கம், ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் சுமார் 450 பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், சுமார் 18 மாணவர்களை பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல முறைகேடுகளுக்கு பிறகு மணி கணக்கு அடிப்படையில் பணியமர்த்தப்பட்டது. பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் மாணவர்கள் இணைய வழியாக பயில்வதற்கான முறை ஆரம்பிக்கப்பட்டு, இதற்கு சாப்ட்வேர் ஒன்றினை முறையீடாக கொள்முதல் விதிகளை மீறி கணினி அறிவியல் துறை தலைவர் தங்கவேலின் உறவினர் நிறுவனத்தில் கொள்முதல் செய்யப்பட்டது.

பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர அங்கீகாரம் பெறுவதற்காக செய்யப்பட்டுள்ள செலவின வகையில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை பல்கலைக்கழக நூலகர் ஜெயபிரகாஷால் போலியாக தயார் செய்யப்பட்டு மோசடி நடைபெற்றது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலின, பட்டியல் பழங்குடியினர் உரிமைகள் மறுக்கப்படுகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர் நியமனத்தில் விதிமீறல். பெரியார் பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினர் பதவிக்கு தலித் பேராசிரியர்களை புறக்கணித்தது.

பெரியார் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டு வரும் தொலைதூர கல்விக்கு, பல்கலைக்கழகம் மானிய குழு தடை விதித்துள்ளது. எனவே சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, உயர் கல்வித்துறை அரசு கூடுதல் செயலாளர் பழனிச்சாமி மற்றும் அரசு இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் கொண்ட விசாரணைக் குழுவினை அமைத்து அரசு உத்தரவிடுகிறது.

இந்த குழு பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 13 குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இது போன்ற தவறுகள் மீண்டும் நிகழாத வகையில் தடுக்க, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான வழிமுறைகளை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த தவறுக்கு பொறுப்பான அலுவலர்கள் குறித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த குழுவின் விசாரணை அறிக்கை 2 மாதங்களுக்குள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த குழுவின் விசாரணைக்கு தேவையான உரிய அலுவலக வசதிகளை பெரியார் பல்கலைக்கழகம் செய்து தர வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:UP Rape: பெண்ணை கட்டிப்போட்டு தீ வைத்த கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details