தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞர்கள் - மூன்று கார்கள் மீது மோதி விபத்து! - High-speed car collision with 3 cars near Anna Nagar Bridge

சென்னை: மதுபோதையில் காரை அதிவேகமாக இயக்கி, மூன்று கார்கள் மீது அடுத்ததடுத்து மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

accident
accident

By

Published : Feb 14, 2020, 11:18 PM IST

சென்னையில் இன்று காலை 5.30 மணியளவில் அண்ணாநகர் மேம்பாலம் அருகே அதிவேகமாக வந்த கார், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்களை இடித்துவிட்டு நேராக வீட்டின் சுவற்றில் மோதி நின்றுள்ளது.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், விரைந்து சென்று காரின் உள்ளே பார்த்தபோது, நான்கு இளைஞர்கள் அளவுக்கதிகமான மது போதையில் இருப்பது தெரிய வந்தது.

காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞர்கள்

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவினர், நான்கு இளைஞர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காதலர் தினத்தில் உதயமான காதல் - க்யூட் காணொலி!

ABOUT THE AUTHOR

...view details