சென்னை:வாகனங்கள் மூலமாக நடக்கும் குற்றங்களைத் தடுக்கும் வகையில், உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்தும் திட்டம் 2001ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், 2019ஆம் ஆண்டுக்கு முன்பாக தயாரித்த வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளைப் பொருத்தும் பணியை அமல்படுத்த தமிழ்நாடு அரசு 2021ஆம் ஆண்டு ஜனவரியில் டெண்டர் வெளியிட்டது.
இந்த டெண்டரை எதிர்த்து யார்யா சேகர் என்ற நிறுவனத்தின் இயக்குநர் செந்தாமரை தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு அறிவிப்பின்படி மத்திய அரசின் உரிமம் பெற்ற நிறுவனங்கள் தான் அந்த பணியை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி டெண்டரை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தும் உத்தரவின்படியும், மத்திய அரசு அறிவுரைப்படியும் அந்தப் பணிகளை அமல்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.