தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் கிடுகிடுவென உயரும் பூக்களின் விலை! - aadi perukku

Aadi Perukku 2023: ஆடிப்பெருக்கை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆடிபெருக்கை முன்னிட்டு உயரும் பூக்களின் விலை
ஆடிபெருக்கை முன்னிட்டு உயரும் பூக்களின் விலை

By

Published : Aug 2, 2023, 7:21 PM IST

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை(ஆகஸ்ட் 3) ஆடிப்பெருக்கு தினம், அதாவது தமிழ் மாதத்திற்கு ஆடி 18ஆம் தேதி வெகு விமரிசையாக பூஜை, உணவு போன்ற பல்வேறு விதமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனால் சென்னையில் பூக்களின் விலை விற்பனையில் சற்று அதிகரித்துள்ளது. பொதுவாக, ஆடி மாதம் என்றாலே ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை எனப் பல விசேஷ தினங்கள் நிறைந்த மாதமாகவே விளங்குகிறது.

நாளை(ஆகஸ்ட் 03) ஆடிப்பெருக்கு தினமான "ஆடி 18" தமிழகத்தில் உள்ள காவிரி கரைகளிலும், தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற நதிக்கரைகளிலும், புண்ணிய தலங்களிலும் உள்ள நீர்நிலைகளிலும் மக்கள் பூஜை செய்வது வழக்கம் ஆகும். ஆடிப்பெருக்கு தினத்தன்று தாலி பிரித்துக்கோர்த்தல், கோயில்களில் சிறப்புப் பூஜை உள்ளிட்ட பல விசேஷங்கள் நடைபெறுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து நாளை தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு தினம் விசேஷமாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக விசேஷங்களுக்குத் தேவையான பூக்களின் விலை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உச்சத்தை எட்டியுள்ளது.

சென்னை கோயம்பேடு மலர் சந்தைக்கு நாள்தோறும் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சேலம், விழுப்புரம், தருமபுரி என சில மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் தினந்தோறும் விற்பனையாக சென்னைக்கு பூக்கள் வரத்து இருந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து சென்னையின் புறப்பகுதிகளான பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி பகுதிகளில் இருந்தும் மல்லி, சாதி போன்ற பூக்கள் விற்பனைக்கு வருகிறது. பூக்களின் வரத்திற்கு ஏற்றது போலவும், விளைச்சலைக் கொண்டும், பூக்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாளை(ஆகஸ்ட் 3) ஆடி 18ஆம் நாள் கொண்டாப்படும் நிலையில் சென்னையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து கோயம்பேடு மலர் வியாபாரி அருள் விசுவாசம் கூறியதாவது, ''நாளை ஆடி 18 தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாப்படும். இதனால் தமிழகம் முழுவதும் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. ஆடி மாதம் என்பதால் பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது.

மேலும், இம்மாதத்தில் திருமணம் நாட்கள் இல்லை என்பதால் பூக்களின் விலை கடந்த இரண்டு நாட்களை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. இதனால் இன்று(ஆகஸ்ட் 2) மல்லி கிலோ ரூ.500-க்கும், சாதி முல்லை ரூ.250-க்கும், ரோஜா-ரூ.120-க்கும், பன்னீர் ரோஸ் ரூ.80-க்கும், சாக்லேட் ரோஸ்-ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஆடி 18 விமரிசையாக கொண்டாப்படும் டெல்டா மாவட்டங்களில் பூக்களின் விலை வழக்கத்தை விட இரு மடங்கு அதிகரித்துள்ளது'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Super Moon : வானில் ஜொலித்த சூப்பர் மூன்! போட்டோ எடுத்து மக்கள் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details